மட்டக்களப்பில் இலங்கை தேசிய சமாதான பேரவை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழு ஆகியவற்றின் ஒழுங்கு படுத்துதலில் வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்த்துக்கொள்வோம் தொனிப்பொருளில் அமைதிபேரணி ஒன்று நேற்றைய தினம் ( 30) முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு தாண்டவன் வெளி தூய காணிக்கை அன்னை ஆலய முன்பாக இருந்து பேரணி ஆரம்பமாகியது . மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உற்பட தேசிய சமாதான பேரவை உறுப்பினர்கள் , சர்வமத செயற்குழு உறுப்பினர்கள், ஆன்மீக தலைவர்கள் , இளைஞர்கள் ,யுவதிகள் , சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் பேரணியில் பங்கேற்றிருந்தனர்.
பேரணி மகாத்மாகாந்தி பூங்காவை அடைந்ததை தொடர்ந்து கூட்டம் ஒன்று இடம் பெற்றது .
பேரணியில் பங்கு பற்றிய மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் உட்பட ஆன்மீக தலைவர்கள் மற்றும் இலங்கை தேசிய சமாதான பேரவை திட்டமிடல் செயலாளர் ஆகியோர் உரையாற்றினார்கள் .
சமூக வலைத்தளங்கள் உட்பட ஊடகங்களில் வெறுப்பூட்டும் பேச்சுக்களையும் , இன ரீதியாக வன்முறைகளை தூண்டும் செய்திகளை பதிவிடுவதை தவிர்க்கப்பட வேண்டும் என்று உரையாற்றியவர்கள் வலியுறுத்தினார்கள் .
இணையத்தள வன்முறைகளை தோற்கடிக்க ஒன்றாக இணைவோம் எனும் தொனிப்பொருருளில் வடிவமைக்கப்பட்ட பதாதையில் பேரணியில் கலந்து கொண்டவர்கள் கையொப்பமிட்டனர்,அத்தோடு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தோடு பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன .
செய்தி ஆசிரியர்