மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வனவளத் தினைக்களத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிராமங்களுக்கு அரச அதிகாரிகள் கள ஆய்வு .











மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட தேக்கஞ் சேனை
சம்பக் கலப்பை    நாவற் குளம் மற்றும் இன்னும் சில கிராமங்களுக்கு ஆடிக்கடி செல்லும் வன வளத் திணைக்கள அதிகாரிகள்  தாங்கள் நீண்ட காலமாக வசித்து வந்த பூர்வீக காணிகளை விட்டு எழும்புமாறு கடந்த காலங்களில் பல விதமான அச்சுறுத்தல் களையும்  ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வந்தனர்.

இவை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூகத்தினரால் பல தடவைகள் சம்மந்தப் பட்ட அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் கவணத்திற்கு கொண்டு வந்தனர்.  அதேநேரம் பல விதமான  கவணயீர்ப்பு மற்றும் எதிர்ப்பு போராட்டங்களையும்  மேற்கொண்டு வந்தனர்.

இந் நிலையில் கடந்த 4.7.2025 அன்று தேக்கஞ்சேனைக் கிராமத்திற்கு சென்ற வனவளத் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந் த மக்களை கிராமத்தை விட்டு வெளியேறுமாறு அச்சுறுத்தி இருந்தனர்.

இது தொடர்பாக 7.7.2025 {நேற்று} காலை வாகரைப் பிரதேச செயலாளர் அவர்களைச் சந்தித்து எழுத்து மூலமான முறைப்பாடு ஒன்றினை பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சிவில் சமூகத்தினரால் வழங்க ப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் பிரதேசசெயலாளர் அவர்களால் சம்மந்தப் பட்ட கிராம சேவகர் மற்றும் காணித் திணைக்கள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட உத்தரவிற்கமைய இன்று காலை மேற்படிக் கிராமங்களுக்கான களப்பயணத்தினை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.

இப் பயணத்தில்
கிராம சேவகர்
காணித் திணைக்கள அதிகாரி
வனவளத் தினைக்கள அதிகரிகள்
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் நிறுவண உத்தியோகத்தர்
காணிி உரிமைக்கான வலையமைப்பினர்
காணி உரிமைக்கான திட்ட வரைவு உறுப்பினர்
ஆகியோர் இந்த கள ஆய்வுப் பயணத்தினை மேற் கொணடிருந்தனர்.

பயண முடிவில் மேற்படி கிராமங்கள் தொடர்பிலான கள அறிக்கை  சம்மந்தப்பட்ட அதிகாரிகளினால் வாகரைப் பிரதேச செயலாளர் அவர்களூக்கு வழங்கப்பட்டது.

மேற்படிக் கிராமத்தில் வசித்து வரும்  மக்களுடன் உரையாடிய அதிகாரிகள்  கூறுகையில் தாங்கள் குடி இருக்கும் இடத்தில் தொடர்ந்து இருக்கலாம் என்று கூறியதுடன் அங்கு இருந்த மக்களின து பெயர் விபரம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றைப் பதிவு செய்து சென்றனர்.

அத்துடன் அந்த மக்கள் தாங்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதனை ஆதாரங்களுடன் எடுத் தியம்பினர்.
இதற்கு ஆதாரமாக காய்த்துப் பழுத்திருந்த வாழைகள்
பப்பாளி
மா
எழுமிச்சை
புளியம் மரம்
முந்திரிகை மரம் மற்றும் நிலக்கடலை
மரவள்ளித் தோட்டம் என்பனவற்றை கண்னுற்ற அதிகாரிகள் பார்த்து திகைத்து நின்றனர்.

நீண்டகால மக்கள் போராட்டத்தின் விளைவாக அரச அதிகாரிகள்  குழுவொன்று உத்தியோக பூர்வ களப் பயணம் ஒன்றினை மேற்கெண்ட இச் செயற்பாடானது மக்களின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த அங்கிகாரமாக பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் மேற்படிக் கிராம மக்களுக்கான காணிக் கச்சேரிகள் நடாத்தப்பட்டு அவர்களது வாழ்வியலு க்கான காணிகள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந் நிலையில் இன்று நடைபெறும் பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்படும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

தகவல்
ச.சிவயோகநாதன்
மனித உரிமை செயற்பாட்டாளர்.