கிழக்கு மாகாணமட்ட கரம் போட்டியில் மட்/மாவிலங்கத்துறை விக்னேஷ்வரா வித்தியாலய மாணவர்கள் 17 வயது பிரிவில் ஆண் அணியினர் முதலாம் இடத்தையும் பெண் அணியினர் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்கள்.
இவ் பாடசாலை கஷ்டப்பிரதேச பாடசாலையாகும், இங்கு குறைந்தவளங்களைக் கொண்டு மாணவர்களை சிறப்பாக பயிற்றுவித்து வழி நடத்திய பயிற்றுவிப்பாளர் திரு.கோ. சாத்வீகன் மற்றும் திருமதி.வ.விஜயசிறி ஆசிரியை அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கும் சமூகத்தினருக்கும் நலன்விரும்பிகளுக்கும் பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிவித்து கொள்கிறது .