மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் டேற்றா நிறுவனத்தின் அனுசரணையில் பார்வையற்றவர்களுக்கான சத்தப்பந்து சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டி.

 



 












உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் டேற்றா  நிறுவனத்தின் முழுமையான நிதி அனுசரணையில்  பார்வையற்றவர்களுக்கான சத்தப்பந்து சமர் கிரிக்கெட் சுற்றுப் போட்டியானது வடக்கு, கிழக்கு மாகாண அணிகளுக்கிடையில் கடந்த 19.07.2025  அன்று ஆரையம்பதி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் மட்டுப்படுத்தப்பட்ட  30 ஓவர் போட்டியாக இடம்பெற்றது.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற யாழ் வடமாகாண அணி முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி   10  விக்கெட்களை இழந்து 324  ஓட்டங்களை பெற்றது. 325  எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய வட மாகாண அணி 9  விக்கெட்களை இழந்து 197  ஓட்டங்களை பெற்று 127  ஓட்டங்களால் கிழக்கு மாகாண அணி வெற்றி பெற்றது. சிறந்த ஆட்டநாயகன் விருது கிழக்கு மாகாண அணி சார்பாக 147  ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த மைக்கல் அன்ரனி வின்சிலி அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

இந் நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்
திருமதி.J.J. முரளிதரன்,  
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்
திரு.K. குணநாதன்,
மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர்
திரு.S.  அருள்மொழி,
ஆரையம்பதி மகா வித்தியாலய அதிபர்
திரு.S.  நந்தகோபால்,
ஓய்வு பெற்ற கணக்காளர்
திரு.A. ரவீந்திரன்,
டேற்றா அமைப்பின் இணைப்பாளர்
திரு.K. ஜீவராசா,
சிவாநந்தா பாடசாலையின் பழைய மாணவர் சங்க செயலாளர்
திரு.J.  சாய்ராஜன்,
தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையின் தலைவர்
திரு.N.  இதயராஜன்
ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.