மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று மிகச் சிறப்பாக லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றுள்ளது.
இன்று காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில்,
மன்னார்
மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை,குருநாகல்
மறைமாவட்ட ஆயர் அந்தோணி பெரேரா ஆண்டகை , மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி
சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து
நேசன் அடிகளார், ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை
கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.