பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

 


பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். 
 
இந்த வேகம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 
 
ஜூலை 09, 12 மற்றும் ஆகஸ்ட் 5 ஆகிய திகதிகளில் நேரம் சிறிது குறைவாகும் என்பதை உணரக்கூடிய நிலை ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். 
 
இது 1.3 முதல் 1.5 மில்லி செக்கன் வரை குறையும் 
 
இவ்வாறு தொடர்ந்து நடைபெறுமானால் 2029ஆம் ஆண்டில் சில செக்கன்களை நேரத்திலிருந்து கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். 
 
இவ்விதமான சுழற்சி வேக அதிகரிப்பு 2020ஆம் ஆண்டில் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.