மட்டக்களப்பு – பதுளை பிரதான வீதியில் உறுகாமம் பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஏழு வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் 06.07.2025 பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
உறுகாமம் பிரதேசதைச்சேர்ந்த புவனேஸ்வரன் கபிஷேக என்ற சிறுவனே பலியானவன்.
இவரது தாயின் முன்பள்ளிக்கூடத்தை நடாத்துவதற்கு உதவிவழங்கும் மதபோதகர் ஒருவரது பிரியாவிடை நிகழ்விற்காக மகாஓயா பிரதேசத்திற்குச் சென்று வீடுதிரும்பும்போது மகன் உலகிற்கு விடைகொடுத்துள்ள இச்சம்பவம் உறுகாமம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த சிறுவனின் தாயார் பஸ்வண்டியிலிருந்து இந்த மகனை கீழே இறக்கிவிட்டு மகளை இறக்குவதற்காக மீண்டும் பஸ் வண்டிக்குள் ஏறும்போது சிறுவன் அந்த பஸ் வண்டியின் முன்புறமாக வீதியைக் கடந்து செல்லமுட்பட்ட வேளையில் அதேவழியாக வேகமாக வந்த தனியார் பஸ் வண்டி சிறுவனை மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் படுகாயமடைந்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்வழியில் மரணமடைந்ததும் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் அங்கு முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.