மட்/பட் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை சிறார்களுக்கு சிந்தனா
சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சி செயலமர்வானது பாடசாலை ஆரம்ப பிரிவிற்கான
உப அதிபர் எஸ்.கேதிஸ்வரன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்
பெற்றது.
மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தின் (HRTC)
அனுசரனையில் சிறார்களுக்கான சிந்தனா சக்தியை அதிகரிப்பதற்கான பயிற்சிகள்
இதன் போது வழங்கப்பட்டது.
மேலும் சிறார்களின் எண்கணித செயற்பாட்டை
மேம்படுத்துவதற்கும், துரித கதியில் கணித கற்றல் விடயங்களை மேற்கொள்தல்
மற்றும் ஞாபக சக்தியை அதிகரிப்பதற்குமான ஆலோசனைகள் பெற்றார்களுக்கு
வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றைய சிறார்கள் எதிர்கால
தலைவர்கள் என்பதை அடிப்படையாக் கொண்டு இப் பிரதேச சிறார்களின் கற்றல்
செயற்பாட்டை அதிகரிப்பதற்கும் நினைவாற்றலை அதிகரிப்பதற்குமான பயிற்சிகள்
மனிதவள பயிற்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தினரின் துறைசார் நிபுணர்களினால்
இதன் போது வழங்கப்பட்டது.
இதில் HRTC வளவாளர்களான
அ.கருணாகரன், க. திசன் ஆகியோரினால் சிறார்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இவ் பயிற்சி செயலமர்வில் அதிகளவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.