ஆசியா முழுவதும் ஆடை உற்பத்தித்துறையில் பணியாற்றும் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்களது தொழில் குறித்த அச்சத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கான காலம் அல்லது வரிகளை எதிர்கொள்வதற்கான கால அவகாசம் நெருங்கியுள்ளதால் அவர்கள் அச்சத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. 
 
உலகளாவிய ரீதியில் பல்வேறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தீர்வை வரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது. 
 
இந்தநிலையில், குறித்த வரியைக் குறைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வரும் நிலையில், சில நாடுகள் வரி குறைப்புக் கடிதத்தினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து பெற்றுள்ளன. 
 
இதன்படி, ட்ரம்பிடம் கடிதங்களைப் பெற்ற நாடுகளில் இலங்கை மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் ஆடை உற்பத்தி தொழிற்துறையை மையப்படுத்தியுள்ளன. 
 
இந்த நாடுகளின் பாரியளவிலான ஏற்றுமதி சந்தையை அமெரிக்கா கொண்டுள்ளது. 
 
இந்தநிலையில், அமெரிக்கா, இலங்கை உற்பத்திகளுக்கு 30 சதவீத வரியை இறுதிசெய்யுமானால், ஆடை உற்பத்தித்துறை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுமெனக் கூட்டு சங்கங்கள் தெரிவித்துள்ளன.