இலங்கையில்
சுட்டுக்கொல்லப்பட்ட அரசியல்வாதியான விஜயகுமாரதுங்க 1986ஆம் ஆண்டு, ஜூன்
மாதத்தில், தமிழகத்தின் முதலமைச்சர் எம் ஜி ஆர் என்ற எம்.ஜி ராமசந்திரனை
சந்தித்து கலந்துரையாடிமை குறித்து, தெ ஹிந்து நினைவூட்டல் குறிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது.
அதில், தமிழர்களின் பிரச்சினையை
தீர்ப்பதற்காக, நூறு தடவைக்கூட தமிழ்நாட்டுக்கு தம்மால் வரமுடியும் என்று
விஜயகுமாரதுங்க செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தமையை அந்த செய்தித்தாள்
சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை இனப்பிரச்சினை தீர்வுக்காக விஜயகுமாரதுங்க எடுத்த முயற்சிகளை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குறிப்பு எழுதப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது, விஜயகுமாரதுங்க, ஈழப்போராளிகளையும் தமிழகத்தில் சந்தித்தார் என்றும் தெ ஹிந்து நினைவுப்படுத்தியுள்ளது.