தொப்பிமனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று(27) மாலை அவர் கைதுசெய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.
இந்த கைதையடுத்து இனிய பாரதியின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி கல்முனை நகரில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட
விசாரணையின் அடிப்படையில், நேற்று பிற்பகல் இனிய பாரதியின் அலுவலகம்
முற்றுகையிடப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அவ்வாறே தம்பிலுவில் பிரதான வீதியில்
இயங்கி வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முகாம்,
தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவையும்
சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்
புலிகள் கட்சியைச் சேர்ந்த இனிய பாரதியின் மற்றுமொரு சகாவான திருக்கோவில்
விநாயகபுரத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில்
வைத்துக் கைதுசெய்யப்பட்டுள்ளார்.