மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலை விளையாட்டு விழா - 2025





 





































 

 









 






































மட்டக்களப்பு கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் சாரதா பாலர் பாடசாலையின் வருடாந்த  விளையாட்டு விழா  ராமகிருஷ்ண மிஷன் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது .
கல்லடி உப்போடை ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ்  அவர்கள் விளையாட்டு விழாவுக்கு தலைமை தாங்கினார் .
விழாவுக்கு விசேட அதிதிகளாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன்,  மட்டக்களப்பு மண்முனை வடக்கு  பிரதேச செயலக முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகத்தர் T. மேகராஜ் மற்றும்  முன்பள்ளி வெளிக்கள உத்தியோகத்தர் S.பரணீதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர் .
ஆரம்ப நிகழ்வாக பொது முகாமையாளரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டதோடு , அதிதிகளால் மிஷன் கொடி மற்றும் பாடசாலைகொடியும் ஏற்றப்பட்டது  அதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டு ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு சத்திய பிரமாணத்தோடு   விளையாட்டு விழா ஆரம்பமானது .
விளையாட்டுப்போட்டிகள் அனைத்தையும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் நெறிப்படுத்தி இருந்தார்கள்
விளையாட்டுக்களில் பங்குபற்றி வெற்றி பெற்ற சாரதா பாலர் பாடசாலை சிறார்களுக்கு பொது முகாமையாளர் , மற்றும் அதிதிகளால்  சான்றிதழ்களும் ,வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டன.
விளையாட்டு விழாவுக்கு சாரதா பாலர் பாடசாலை பாடசாலை ஆசிரியர்கள்,  சிறார்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

செய்தி ஆசிரியர்