கிழக்கு மாகாண பாடசாலை மட்ட வொலிபோல் போட்டியில் மட்/மாமாங்கேஸ்வர் வித்தியாலயம் இரண்டாம் இடம்!!

 


 

கிழக்கு  மாகாண பாடசாலை மட்ட வொலிபோல் போட்டிகள் இவ் வருடம் அம்பாறையில் மாவட்டத்தில் இம்மாதம் 04,05,06 திகதிகளில் நடைபெற்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள  டி.எஸ்.சேனாநாயக தேசிய பாடசாலையில் இடம்பெற்ற மாகாண பாடசாலை மட்ட வொலிபோல் போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மாமாங்கேஸ்வர் வித்தியாலயத்தின் 18 வயது பிரிவு ஆண்கள் அணி மாகாண பாடசாலை மட்ட வோலிபோல் போட்டிகளில் பங்குபற்றி சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதி போட்டியில் பங்குபற்றி இரண்டாம் இடத்தை பெற்று கொண்டுள்ளது.

2019ம் ஆண்டுக்கு பின்னர் மட்/மாமாங்கேஸ்வர் வித்தியாலய பாடசாலை அணி பெற்றுகொண்ட முதல் வெற்றி இதுவாகும். அத்தோடு விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம் கிடைத்த பின்னரும் பெற்றுகொண்ட முதல் வெற்றியும் இதுவாகும். 

இவர்களுக்கான பயிற்சிகளை வழங்கிய  விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் குகேந்திரா கிரிஷாந்தி, மற்றும் சகல உதவிகளை வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மாமாங்கம் இளைஞர் கழகம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.