கதிர்காமக் கந்தப் பெருமானின் வருடாந்த ஆடிவேல் பெருவிழா இன்று நடைபெற உள்ளது.
இதனையொட்டி இன்று மாலை விசேட வீதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் பங்கேற்பார் எனத் தெரிய வருகிறது.
இனம், மதம், மொழிக் கடந்து அனைவராலும்
பூஜிக்கப்படும் கதிர்காமக் கந்தனின், வருடாந்த ஆடிவேல் உற்சவத்தில், இன்றைய
தினம் மகோற்சவ பெருவிழா இடம்பெறுவதுடன், நாளைய தினம் தீர்த்தோற்சவம்
நடைபெறவுள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு, மலையகம்
உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்
கதிர்காமத் திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
கதிர்காமக் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.