மட்டக்களப்பில் விசேட தேவைக்குறிய மாணவர்களுக்கான கற்றல் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்.


















மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தற் கல்வியை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கலந்துரையாடல்  நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட  செயலாளர் ஜி. பிரணவன் மேற்பார்வையின் கீழ் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான விசேட கல்வியையும் உட்படுத்தற் கல்வியை வழக்கும்  பங்குதாரர்களின் பங்களிப்பும் மற்றும் கருத்து பகிர்வுகளும் இடம் பெற்றது.


மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட பிள்ளைகளுக்கான கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்ளும் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விசேட தேவைக்குரிய மாணவர்களுக்கான பாடசாலை ஒன்றை ஸ்தாபிப்பதற்கான சாத்திய வளம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருந்து தெரிவித்த அரசாங்க அதிபர் விசேட தேவைக்குரிய மாணவர்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்களை  உருவாக்குவதற்கான அவசியம் தொடர்பாக  பங்குதாரர்களுக்கு இதன் போது தெளிவு படுத்தினார்.

 இந் நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திருமதி ச.கோணேஸ்வரன், பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , நிறுவன தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் விசேட தேவைக்குரியவர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.