பல்வேறு அம்சங்களை கொண்ட துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பில் மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்களை கொண்டு சேர்க்கும் நிகழ்வு ஜூலை இனப்படுகொலையை நினைவு கூறும் முகமாக ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் சம உரிமை இயக்கம் ஒன்றிணைந்து மட்டக்களப்பு பேருந்து பஸ் தரப்பிடம் முன்பாக கையெழுத்து வாங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை(12) இடம்பெற்றது.
இந்நிகழ்வை சம உரிமை இயக்கம் அமைப்புக்கள் ஏற்பாடு செய்திருந்தன. சம உரிமை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் கிருபாகரன் ஈரோஸ் ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர் ராஜ ராஜேந்திரா, சம உரிமை இயக்கத்தின் தலைவர் தன்னே ஞானசார தேச பங்குபற்றியிருந்தனர்.
தமிழ் தேசிய ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்டு பொருட்களை இழந்து அகதிகளாக வாழ்கின்ற ஒரு வாழ்க்கை இனிவரும் காலங்களில் இடம் பெறக் கூடாது என்ற வகையிலும் தேசிய பிரச்சனைக்கான நீதியும் வேண்டும் என்ற வகையில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மக்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்வும் மட்டக்களப்பு நகரில் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் மக்களுக்கு தெளிவூட்டும் ஒரு அங்கமாக துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.