கிழக்கு மாகாண பாடசாலை மட்ட பூப்பந்தாட்டப் போட்டிகள் இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தின் MC Hayzer உள்ளக அரங்கத்தில் 15,16 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
மட்டக்களப்பு வலயத்தில் சாம்பியனாக வெற்றியடைந்த 20 வயதுப் பிரிவு ஆண்கள் அணி மாகாண பாடசாலை மட்ட போட்டிகளில் பங்குபற்றி சகல போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதி போட்டியில் தோல்வியைத் தழுவி 3 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டனர்.
20 வயதுப் பிரிவு ஆண்கள் அணி மட்டு/இந்துக் கல்லூரி பாடசாலை பெற்றுக் கொண்ட முதல் வெற்றியும் இதுவாகும்.
இவற்றுக்கான பயிற்சிகளைப் பெற்ற மாணவர்கள், அவர்களுக்கு திட்டமிட்டு பயிற்சி வழங்கிய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் கோ.ரிஷாந்தன், து.மதன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ப.பகீரதன் அத்தோடு சகல உதவிகளை வழங்கிய பாடசாலை அதிபர், ஆசிரியர்களை பழைய மாணவர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.