ஹயேஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்

 


ஹயேஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன்  ஐந்து  பேர் படுகாயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த கோர விபத்து கண்டி- ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதி  ஹபரகெட்டிய பகுதியில் இன்று மாலை  நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பில் தெரியவருகையில், 

ஹுன்னஸ்கிரிய - மீமுரே வீதி ஊடாக ஹபரகெட்டிய பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த  ஹயேஸ் ஒன்று திடீரனெ பள்ளத்திற்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியது. 

விபத்தில்  பெண்கள் இருவர், ஆண் என மூவர் உயிரிழந்துள்ளதுடன்  ஐந்து  பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

படுகாயமடைந்தவர்கள்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ள நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்று பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.