கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

 


தெஹிவளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, மொரட்டுவை மற்றும் எகொட்ட உயன உள்ளிட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களிடையே மது அருந்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. 

இந்த விடயம்  கவலைகளை எழுப்புகிறது என தெஹிவளை - கல்கிஸ்ஸை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் வைத்திய நிபுணருமான  சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இது தொடர்பில் வைத்திய நிபுணருமான சமல் சஞ்சீவ மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் கரையோர பகுதிகளில் கர்ப்பிணிப் பெண்களில் பலர் மது மற்றும் போதைப்பொருள் பாவனையிலும், வர்த்தகத்திலும் ஈடுபடுவது பொதுவான ஒரு விடயமாக காணப்படுகிறது.

இது ஒரு பெரும்  பொது சுகாதாரப் பிரச்சினை ஆகும். இதனை சுகாதாரத்துறையால் மட்டும் கையாள முடியாது. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பிற அரச திணைக்களங்கள், சமூக சேவை அமைப்புகளின் ஒத்துழைப்பு அவசியம்.