மனித பேரவலங்களின் சாட்சியாக, யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைக்குழி பதிவாகியுள்ளது.
உள்நாட்டில் மாத்திரமின்றி
சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ள சித்துப்பாத்தி மனித புதைகுழியின்,
இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள், 11 ஆவது நாளாக இன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அரை நாள் மாத்திரமே அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தநிலையில், செம்மணி - சித்துபாத்தி
மனிதப்புதைகுழியின் இன்றைய அகழ்வு நடவடிக்கையின் போது இரண்டு
என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதன்படி, மனித புதைகுழியிலிருந்து இதுவரை 47 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில், 44 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.