வட மாகாண கல்விப் பணிப்பாளராக கிழக்கை சேர்ந்த ஜெயச்சந்திரன் நியமனம்

 




 வட மாகாணக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிருவாக சேவையின் முதலாம் தர அதிகாரி வை.ஜெயச்சந்திரன் SLEAS l அரச சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய வேளை இந்த பதவி உயர்வு கிடைத்துள்ளது.

.இவர் கிழக்கு மாகாணத்தின் திருக்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இவர் ஏலவே திருக்கோவில் வலயம் பட்டிருப்பு வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பதில் வலயக்கல்விப் பணிப்பாளராக பணியாற்றியவராவார்.


வடமாகாணத்தில் கிழக்கு மாகாண கல்வி அதிகாரி ஒருவர் மாகாண கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டமை இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

( வி.ரி.சகாதேவராஜா)