சம்பந்தனின் வெற்றிடம், ஈழத்தமிழர்களின் இனவிடுதலை நோக்கிய அறவழிப் போராட்டப் பயணத்தில் காலவெளியால் நிரப்ப முடியாத வெற்றிடம்.

 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவர், அமரர் இரா.சம்பந்தனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விசேட நினைவேந்தல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 
 
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில், இன்றையதினம் கட்சியின் மாவட்டக் கிளைப் பணிமனையில், இந்த நினைவேந்தல் நடைபெற்றது. 
 
இதன்போது அமரர் இரா. சம்பந்தனின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. 
 
குறித்த நினைவேந்தலில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நினைவுரையாற்றியிருந்தார். 
 
தன் இறுதிக்கணம் வரை தமிழ்த்தேசியத் தளத்தில் பயணித்த அரசியல்வாதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய அமரர் இராஜவரோதயம் சம்பந்தனின் வெற்றிடம், ஈழத்தமிழர்களின் இனவிடுதலை நோக்கிய அறவழிப் போராட்டப் பயணத்தில் காலவெளியால் நிரப்ப முடியாத வெற்றிடம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.