கடற்கரையை மேலும் அழகு படுத்தும் நோக்குடன் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது இதன்போது சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொழுதின் பிளாஸ்டிக் பொருட்கள் இப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டதுடன் கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளும் இங்கு முன்னெடுக்கப் பட்டது
புதிய அரசாங்கத்தினால் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டது பின்பு இடம்பெற்ற கிழக்கு மாகாணத்தின் பிரதான ஆரம்ப நிகழ்வாக இடம் பெற்றதுடன் இன்றைய சுத்தப்படுத்தல் பணிகளின் போது சுமார் மூன்று கிலோமீட்டர் வரையிலான பகுதிகளில் இத்திட்டமானது முன்னெடுக்கப்பட்டது
கிழக்கு மாகாண ஆளுநாின் ஆலோசனைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலா துறையை மேலும் வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில்கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தினை தொடா்ச்சியாக முன்னெடு பட்டு வருகிறது
இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட கல்லடி கடற்கரையினை சிரமதான சுத்தம் செய்யும் நிகழ்வு
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது
இந்நிகழ்விற்கு
பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்தின சேகர கலந்துகொண்டு இவ்வேளை திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்
கிழக்கு மாகாண சபையின் உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர் அரச உயர் அதிகாரிகள் பாதுகாப்பு படையினர் என பலரும் இந்த வேலை திட்டத்தில் கலந்து கொண்டனர்