பெண்ணொருவரின் கழுத்தைத் தாக்கி சங்கிலி அறுக்கப்பட்டதில் பெண் உயிரிழந்துள்ளார் .

 


 

பெண்ணொருவரின் கழுத்தைத் தாக்கி சங்கிலி அறுக்கப்பட்டதில் பெண் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 இந்தச் சம்பவம் இரத்தினபுரி - குருவிட்ட, தேவிபஹல பகுதியில் நேற்று (2) நிகழ்ந்துள்ளது. 

அடையாளம் தெரியாத ஒரு கும்பல் பெண்ணின் கழுத்தில் தாக்கி, அவரது சங்கிலியை அறுத்து விட்டு தப்பித்துச் சென்றுள்ளது. 

தாக்குதலில் காயமடைந்த பெண் இரத்தினபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்தவர் பெண் குருவிட்ட, தேவிபஹல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.