மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேசபந்து மு .செல்வராசாஅவர்களின் ஒழுங்கு படுத்துதலில் அன்னதானம் .

 


 



















மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு    ஈஸ்ட் லகூன் உரிமையாளரும்  தொழிலதிபருமாகிய தேசபந்து மா.செல்வராசாஅவர்களின்  ஒழுங்கு படுத்துதலில் அன்னதானம் .


கிழக்கிழங்கையின் மூர்த்தி தலம் தீர்த்தம் ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இராமாயண இதிகாச வரலாற்றுச் சிறப்புமிகு மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்றைய தினம் (02) மிகவும் பக்தி பூர்வமாக  இடம்பெற்றது.
அதனை முன்னிட்டு மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் தேசபந்து முத்துக்குமார் செல்வராசாஅவர்களின்    ஒழுங்கு படுத்துதலில்  1500 இற்கு மேற்பட்ட பத்தர்களுக்கு  தேசபந்து முத்துக்குமார் செல்வராசா  அவர்களின்  சொந்த நிதியிலிருந்து பகல் உணவு வழங்கி வைக்கப்பட்டதுடன்,  இந் நிகழ்வுகளில் மட்டக்களப்பு வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.