மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கருகில் அமையப்பெற்ற சுவாமி விபுலாநந்தர் கருங்கற்சிலை பீடத்தில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு .

 


 

 




 





























 மட்டக்களப்பு புதிய    கல்லடி  பாலத்திற்கருகில் அமையப்பெற்ற    சுவாமி விபுலாநந்தர்  கருங்கற்சிலை   பீடத்தில்   மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு    2025.07.19 மாலை   ராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் தலைமையில்  சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபையின்  ஒழுங்கு படுத்துதலில்  நடைபெற்றது.
மலரஞ்சலி நிகழ்வை தொடர்ந்து  அடிகளாரின்  ''வெள்ளை நிற மல்லிகையோ வேறெந்த மாமலரோ'' பாடல் வின்சென்ட் கல்லூரி மாணவிகளால் இசைக்கப்பட்டது .
மலரஞ்சலி நிகழ்வில்  மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் மேலாளர்  சுவாமி நீலமாதவானந்த ஜீ மகாராஜ்  , சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச்சபை தலைவர் க.பாஸ்கரன், செயலாளர் ச.ஜெயராஜா, மட்டக்களப்பு வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் மு. செல்வராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் , பிரதி முதல்வர் தினேஷ், முன்னாள் முதல்வர் தி .சரவணபவன் ,மாநகர ஆணையாளர் தனஞ்ஜெயன் , ஹரி இல்லத்தலைவர் சந்திரகுமார், வலயக் கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி  , பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் ,    சைவ புலவர் திருமதி  சிவாநந்த ஜோதி நடராஜா சைவ சித்தாந்த பயிற்சி மையம் ,  ஓய்வு பெற்ற  முன்னாள் மாவட்ட கல்வி பணிப்பாளர் பவளகாந்தன் , முன்னாள் பாடசாலை அதிபர் திலகவதி ஹரிதாஸ்  ஆகியோரும்  பங்கேற்றிருந்தனர் .
 உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் சுவாமி விபுலாநந்த அடிகளார் தமிழுக்கும் சைவத்திற்கும் ஆற்றிய தொண்டுகள் பற்றி  அஞ்சலி நிகழ்வில் பங்கேற்றவர்கள் எடுத்தியம்பினார்கள்.
சுவாமி விபுலாநந்தர்  கருங்கற்சிலை   பீடம் அமைக்கப்பட்ட பின்னர்  மலரஞ்சலி செலுத்தும் முதலாவது  நிகழ்வு இதுவாகும்
 மட்டக்களப்பு கல்லடி  பாலத்திற்கருகில் நிர்மாணிக்கப்பட்ட  15-அடி  உயரமான சுவாமி விபுலாநந்தர் கருங்கற்சிலை உலகின் முதலாவது கருங்கற்சிலை என்பது குறிப்பிட்ட தக்கதாகும் .
இவ் மலரஞ்சலி நிகழ்வில் ஹரி இல்ல மாணவர்கள் , சுவாமியின் பற்றாளர்கள் , சமூகசெயற் பாட்டார்கள் என பலரும் கலந்து கொண்டார்கள் .

செய்தியாசிரியர்