மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 


பாலஸ்தீனத்தில் நடத்தப்படுகின்ற போர் குற்றங்களுக்கு நீதி கோரி மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பாலஸ்தீனத்தில் கொல்லப்படுகின்ற பொது மக்களுக்கு நீதியும் சுதந்திரமும் கிடைக்க வேண்டும் என்று  பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மீராவோடையில் கவனயீர்ப்பு பேரணி  நடைபெற்றது.

மட்டக்களப்பு மீராவோடை இளைஞர்களின் ஏற்பாட்டில், மீராவோடை ஜிம்மா  தொழுகையின் பின்  மீரா ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடி கவனயீர்ப்பை முன்னெடுத்தனர். 

இதன்போது பாலஸ்தீன மக்களுக்கு நீதி கோரி பதாதைகளை ஏந்தியவாறும்  இஸ்ரேலுக்கு  எதிரான கோசங்களை எழுப்பியவாறும் கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.