ஐஸ் போதைப்பொருளுடன் தம்பதிகளும் போதைப்பொருள் வாங்கச் சென்ற ஒருவருமாக மூவர் பொலிஸாரால்கைது




வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் நாவலடி பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 மற்றும் 22 வயது தம்பதிகளும் போதைப்பொருள் வாங்கச் சென்ற ஒருவருமாக மூவர் வாழைச்சேனை பொலிஸாரால்கைது செய்யப்படுள்ளனர்.

மிஃராஜ் வீதி, பிரைந்துறைசேனையைச்சேர்ந்த 22 வய்துடைய குடும்பப்பெண்ணும் முஸ்லிம் கொலனி, கதுறுவெலயை சேர்ந்த 23 வயதுடைய அவரது கணவரும் போதைப்பொருளைக் கொள்வனவு செய்வதற்காகச்சென்ற ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களிடமிருந்து 12,400 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய  தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.எல்.லசந்த பண்டாரவின் வழிகாட்டல், ஆலோசனைக்கமைய  ஊழல் ஒழிப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி அசங்க தலைமையிலான திரு வீரசிங்க, திரு கபிலேஷ், திரு அக்ரம், திரு ஜயமன்ன, திரு மனகர மற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மதுவந்தி ஆகியோர் அடங்கிய குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

 

  ந.குகதர்சன்