போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில்
ஈடுபட்டவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு, உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து
வைக்கப்பட்டிருந்த நாராதொட்ட ஹேவாகே அஜித் குமார் எனப்படும் ‘தெவுண்டர
குடு சமில்’ மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புஸ்ஸ
உயர் பாதுகாப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குடு சமில், உடல்நலக்
குறைவு காரணமாக சமீபத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினத்தில், நீதிமன்ற விசாரணைக்காக சென்று கொண்டிருந்த குழுவொன்று பயணித்த வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் குற்றவாளியாகக் காணப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் காலம் கடத்தி வந்த நிலையில் இன்று வைத்தியசாலையில் மரணம் அடைந்துள்ளார்.