District Media Unit News
மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனைக் கண்காட்சியொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட மகளீர் இணைப்பாளர் திருமதி.அருணாளினி தலைமையில் இடம் பெற்ற விற்பனைக் கண்காட்டியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன் அவர்களும், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மகளிர் சமாஜத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மகளீர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மகளீர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட விற்பனைக் கண்காட்சியொன்று இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக மாவட்ட மகளீர் இணைப்பாளர் திருமதி.அருணாளினி தலைமையில் இடம் பெற்ற விற்பனைக் கண்காட்டியை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்விற்கு விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி.நவரூபரஞ்ஜினி முகுந்தன் அவர்களும், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட மகளிர் சமாஜத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மகளீர் அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


























