முதியவர் ஒருவர் காதுகளால் வாகனத்தை இழுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்

 


மட்டுவிலை சேர்ந்த முதியவர் ஒருவர் காதுகளால் வாகனத்தை இழுத்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்

மட்டுவிலைச் சேர்ந்த 61 வயதுடைய செல்லையா திருச்செல்வம்  என்பவரே இச்சாதனையை பரிந்துள்ளார்

பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இவர்  மட்டுவில் சந்திரபுரத்தில்  புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.

இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார்.

உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்

மேலும்  அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து சாதனை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது