கிழக்கில் மேலாடையின்றி பொதுவெளியில் நடந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


 

பொத்துவில் பொலிஸ் நிலையத்தின் மகளிர் பிரிவு அதிகாரிகளால், மேலாடையின்றி பொதுவெளியில் நடந்த தாய்லாந்து நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் தகவல்களின்படி, இந்தப் பெண் ஒரு ஹோட்டல் நுழைவாயிலில் இருந்து மற்றொரு ஹோட்டல் நுழைவாயில் வரை மேலாடையின்றி நடந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, பொத்துவில் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெண் மற்றும் ஆண் பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அவரைக் கைது செய்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது.

கைது செய்யப்பட்ட பெண் இன்று (15) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.