ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளை சுத்தம் செய்யும் கிளீன் ஸ்கூல், வேலை திட்டம் புதன்கிழமை (09) நாட்டின் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி முகத்துவாரம் விபுலானந்த வித்தியாலயத்தில் இன்று காலை 8.00 மணியிலிருந்து clean Sri Lanka வேலைத் திட்டத்தின் கீழ் - கிளீன் ஸ்கூல் என்னும் தொனிப்பொருளில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணி இடம்பெற்றது.