மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடல்

 



















மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளை பருவ  அபிவிருத்தி வாரத்தினை முன்னிட்டு விசேட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் உதவி மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையின் கீழ்   புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  (17) இடம் பெற்றது.
நாடளாவிய ரீதியில் "சிறுவர் நாம் உலகை வெல்வதற்கு - விளையாட்டுக்கும் இடமளியுங்கள்"  எனும் தொனிப்பொருளில் முன்பிள்ளை  பருவ அபிவிருத்தி வார நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன.

 மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்பிள்ளைப்பருவ  அபிவிருத்தி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக  மாவட்ட முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி இணைப்பாளர் வீ.முரளிதரனினால்  அளிக்கையினுடாக தெளிவூட்டல்கள்  வழங்கப்பட்டன.

மேலும் கிராமிய முன் பிள்ளை பருவ அபிவிருத்தி குழுக்களை விழிப்புணர்வூட்டி வலுப்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள்  மற்றும் வழிகாட்டுதல்கள் இதன் போது தெளிவு படுத்தப்பட்டது.

மேலும் முன்பிள்ளைப்பருவ  அபிவிருத்தியில் சிறார்களின்  சுகாதாரம்  தொடர்பாக முக்கிய கவனம் செலுத்தப்பட்டதுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் முன்பிள்ளைப்பருவ சிறார்களின் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாகவும் அவற்றின் பாதிப்புக்கள் தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர்  முன்பிள்ளை சிறார்களின் கற்றல் செயற்பாடானது மிகவும் முக்கியமாதுடன் அவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.


இந் நிகழ்வில் முன்பள்ளி உதவி கல்விப்பணிப்பாளர்கள், மாவட்ட செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் கடமையாற்றும்  உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள், முன்பள்ளி ஆசிரியர்கள், முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பாலர் கல்வி பணியகத்தின் நிறைவேற்று பணிப்பாளர்,   என பலர் கலந்து கொண்டனர்.