மட்டக்களப்பு கல்லடி உப்போடை இ..கி.மிஷனில் சிறப்பாக நடைபெற்ற குருபூர்ணிமா தினம்

 






























இராமகிருஷ்ண மிஷனின் மட்டக்களப்பு கல்லடி இ.கி.மிஷன் குருகுலம் ஏற்பாடு செய்த குரு பூர்ணிமா தின நிகழ்வுகள் இராமகிருஷ்ண திருக்கோவிலில் (10) வியாழக்கிழமை காலை முதல் சிறப்பாக நடைபெற்றது. .


இந் நிகழ்வு இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி  அக்சராத்மானந்தா ஜீ மகராஜ்  வழிகாட்டலில்
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில்  சுவாமி உமாதீசானந்தா ஜீ ஆகியோருடன் மிஷன் பழைய மாணவர்கள் அபிமானிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்த மிஷன் மாணவ மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.