செம்மணி - சித்துப்பாத்தி
மனித புதைகுழியில் அகழப்படும் என்புக்கூட்டுத்தொகுதிகள் தமிழ் மக்களுக்கு
இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு ஆதாரமாக அமைவதாக இலங்கை தமிழரசுக்கட்சியின்
பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியில் நேற்று இடம்பெற்ற கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் 23 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ளன.
செம்மணி - சித்துப்பாத்தி மனிதப்
புதைகுழியிலிருந்து கடந்த 7 நாட்களில் மாத்திரம் 36 என்புக்கூட்டுத்
தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற
கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு கருத்துரைத்த நாடாளுமன்ற
உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு,
பயங்கரவாதத்தை அவர்களுக்கு எதிராக எய்வதாக தெரிவித்துள்ளார்.





