விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது.

 


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - மந்துவில் பகுதியில், விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுத் தேடுதல் முன்னெடுக்கப்பட்ட பதுங்கு குழி மீண்டும் மூடப்பட்டது. 
 
முல்லைத்தீவு நீதவானின் மேற்பார்வையில் குறித்த பதுங்கு குழியில் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது. 
 
 பதுங்கு குழியிலிருந்து எவ்வித பொருட்களும் கண்டுப்பிடிக்கப்படாமையால், குறித்த குழி மூடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 
 
விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, புதுக்குடியிருப்பு காவல்துறையினரால், நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தேடுதல் மேற்கொள்வதற்கான அனுமதி பெறப்பட்டது. 
 
புதுக்குடியிருப்பு காவல்துறையினர், கிளிநொச்சி குண்டு செயலிழக்கும் பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், தடயவியல் அதிகாரிகள் இணைந்து பதுங்கு குழியினுள் தேடுதலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.