வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மிக அவசியத்தேவையாகக் காணப்பட்ட குளிரூட்டிக்குத் தேவையான Air Curtain வைத்தியசாலை அத்தியட்சகர் எஃப்.பி.மதன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.





வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுப்பொறுப்பாளர் தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேபைப்பிரிவினால் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மிக அவசியத்தேவையாகக் காணப்பட்ட குளிரூட்டிக்குத் தேவையான Air Curtain வைத்தியசாலை அத்தியட்சகர்  எஃப்.பி.மதன் அவர்களிடம்  கையளிக்கப்பட்டது.

வைத்தியசாலை அத்தியட்சகர் எஃப்.பி.மதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த Air Curtain கையளிக்கும் நிகழ்வில் அவசர சிகிச்சைப்பிரிவுப் பொறுப்பாளர் தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.அஸீஸ், அனர்த்த அவசர சேவையின் தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.முபாறக், செயலாளர் ஏ.எல்.சதாம், செயற்பாட்டாளர்களான ஏ.இல்யாஸ் மெளலவி, முஹம்மது கபீர், பெளசுல் ஹமீட் மற்றும் வைத்தியசாலை தாதியர்கள், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

குறித்த Air Curtain க்கான நிதியுதவியினை கத்தாரில் தொழில் புரியும் மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேவைப்பிரிவின் ஆலோசகர் முஹம்மது ஜிப்ரி (ஆதம்) வழங்கியிருந்தார்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்கு வரும் நோயளர்களின் நன்மைகருதி இதற்கான நிதியுதவியளித்த முஹம்மது ஜிப்ரி (ஆதம்) மற்றும் முயற்சிகளை மேற்கொண்ட அனர்த்த அவசர சேவை அமைப்புக்கும் வைத்தியசாலை அத்தியட்சகர் நன்றிகளைத் தெரிவித்தார்.

  ந.குகதர்சன்