பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 94வயது முதியவரை மீட்ட இராணுவ வீரர்கள்!

 



மாத்தறை, ஜூலை 10, 2025 -  பிற்பகல் 02:15 மணியளவில் மாத்தறை மகாநாம பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற 94 வயதுடைய ஒருவரை, 3வது கமுனு ஹேவா படையணியின் இராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு மீட்டனர்.
உடனடியாக மீட்கப்பட்ட அந்த நபர், மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை மகாரோகல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இராணுவ வீரர்களின் இந்த மனிதாபிமான மற்றும் துரித நடவடிக்கைக்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்துள்ளன.