இலங்கையின்
பழம் பெரும் பல்கலைக்கழகமான பேராதனை பல்கலைக்கழகத்தின் 86வது பட்டமளிப்பு
விழா இன்று (23) புதன்கிழமை காலை கோலாகலமாக ஆரம்பமானது .
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய 17 வது வேந்தர் பேராசிரியர் எம்ஏகேஎல் .திசாநாயக்க தலைமையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.
2023/24
இல் மருத்துவப்பட்டப்படிப்பை பூர்த்தி செய்த மருத்துவபீடமாணவர்களுக்கும்
முகாமைத்துவ பீட மாணவர்களுக்கும் மற்றும் மிருக வைத்திய பீட
மாணவர்களுக்கும் முதுமாணிப் பட்ட மாணவர்களுக்கும் இன்று புதன்கிழமை(23)
காலை நான்கு மணிநேரம் பட்டமளிப்பு இடம் பெற்றது.
முன்னதாக
கொட்டும் மழைக்கு மத்தியில் பட்டதாரிகள் மற்றும் வேந்தர் உபவேந்தர்
உள்ளிட்ட பல்கலைக்கழக நிருவாகிகளின் ஊர்வலம் இடம்பெற்றது.
தொடர்ந்து
பட்டமளிப்பு விழா நடைபெறும் ஜிம்னாசியம் மண்டபத்தில் மங்கள விளக்கேற்றலைத்
தொடர்ந்து பல்கலைக்கழக கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைக்கப்பட்டது.
1942
ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெறுகின்ற 86வது
பட்டமளிப்பு விழாவில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பட்டங்களை
பெறுகின்றனர்.
காலையில் சுமார் 1200 பட்டதாரிகள் பட்டங்களை முறைப்படி பெற்றுக் கொண்டனர்.
பட்டமளிப்பு விழா நாளை(24) வியாழக்கிழமையும் நடைபெறுகின்றது .
இதனையொட்டி கண்டி பேராதனை பிரதேசம் களைகட்டியுள்ளது.
( கண்டியிலிருந்து வி.ரி.சகாதேவராஜா)