நுளம்பு பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் சூழலை வைத்திருந்த 73 வளாகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை .

 



நாட்டில் உள்ள 185 பாடசாலைகளிலும் 221 அரச நிறுவனங்களிலும் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு உகந்த சுற்றுச்சூழல் நிலைமைகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
இவற்றில், 35 பாடசாலைகள் மற்றும் 41 நிறுவனங்களில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட இடங்களும் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
 
டெங்கு ஒழிப்பு வாரத்தின் முதல் 5 நாட்களில் ஒரு 111,031 இடங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
 
அவற்றில் 26,625 இடங்களில் நுளம்பு இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழ்நிலைகளைக் கொண்டவை என அடையாளம் காணப்பட்டுள்ளன.
 
இந்தநிலையில், நுளம்பு பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் சூழலை வைத்திருந்த 73 வளாகங்களின் உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.