பிறப்பு, திருமணம், இறப்புச் சான்றிதழ்கள் இனி காலம் முடிந்ததாக ஆகாது!
உங்களிடம்
உள்ள பிறப்பு, திருமணம் அல்லது இறப்புச் சான்றிதழ்கள் 6 மாதங்களுக்குப்
பிறகு செல்லாது என்ற தகவல் முற்றிலும் தவறானது. இந்தச் சான்றிதழ்கள் எந்தக்
காலத்திற்கும் செல்லுபடியாகும் என்பதைப் பதிவாளர் நாயகத் திணைக்களம்
உறுதிப்படுத்தியுள்ளது.
ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற பழைய நடைமுறை இரண்டு வருடங்களுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டது!
அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கல்வி
அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்,
மற்றும் ஆட்பதிவுத் திணைக்களம் போன்ற அனைத்து முக்கிய நிறுவனங்களுக்கும்
இந்த மாற்றம் பற்றி அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே,
உங்களிடம் பதிவாளர் நாயகத் திணைக்களத்தால் வழங்கப்பட்ட, தெளிவான
சான்றளிக்கப்பட்ட நகல் இருந்தால், புதிய சான்றிதழைப் பெற வேண்டிய
அவசியமில்லை.
புதிய சான்றிதழ் எப்போது தேவை?
* உங்கள் சான்றிதழில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே, புதிய, திருத்தப்பட்ட நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்!
துரதிர்ஷ்டவசமாக,
பாடசாலை நடவடிக்கைகள், சாரதி அனுமதிப்பத்திரம் பெறுதல், வெளிநாட்டு முகவர்
சேவைகள் போன்ற பல தேவைகளுக்காக இன்னும் சில அதிகாரிகள் ஆறு
மாதத்திற்குட்பட்ட சான்றிதழைக் கோருகிறார்கள். இது, தற்போதைய நடைமுறை
விளக்கம் இல்லாத அதிகாரிகளின் நிலைப்பாடு மட்டுமே.
எனவே, இனிமேல் எந்த அதிகாரியாவது புதிய சான்றிதழைக் கேட்டால், அது தேவையில்லை என்பதை உறுதியாகத் தெரிவிக்கவும்!
புதிய சான்றிதழ் கோரப்படும் சில உண்மையான சந்தர்ப்பங்கள்
பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே புதிய சான்றிதழ் கோரப்படலாம்:
* சான்றிதழ் தெளிவற்று காணப்பட்டால்.
* சான்றிதழில் பொறிக்கப்பட்டிருக்கும் முத்திரைகள் (Rubber Stamps) தெளிவற்றிருந்தால்.
* சான்றிதழில் ஏதேனும் மாற்றங்கள் செய்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் (உதாரணமாக: எழுத்துக்கள் சுரண்டப்பட்டிருத்தல்).
* உரிய அதிகாரிகளின் கையொப்பங்கள் சான்றிதழில் இல்லாவிட்டால்.
* கையொப்பம் இட்ட அதிகாரியின் பெயர், பதவி ஆகியவற்றுடன் கூடிய முத்திரை பொறிக்கப்படாவிட்டால்.
* சான்றிதழில் அச்சிடப்பட்டிருக்கும் தினத்திற்கும், கையால்
எழுதப்பட்டிருக்கும் வழங்கப்பட்ட தினத்திற்கும் இடையில் வேறுபாடுகள்
காணப்பட்டால்.
இந்தத்
தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!
தவறான புரிதல்களால் அலைந்து திரிந்து புதிய சான்றிதழ்களைப் பெறுவதைத்
தவிர்க்கலாம்!