
இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி பெருந்தலைவருக்கு நினைவஞ்சலி நிகழ்வு இலங்கைத்
தமிழ் அரசுக் கட்சி வவுணதீவு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் இன்று (27)
பிரதேச சபைக்குரிய மண்டபத்தில் மறைந்த இரா.சம்பந்தன் அவர்களுக்கு ஓராண்டு
அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஶ்ரீநேசன்,இரா.சணாக்கியன்,இ.சிறிநாத், மாநகர
முதல்வர்,பிரதேச சபை தவிசார்கள்,என கட்சியின் பிரமுகர்களும்
கலந்துகொண்டனர்.