54 வருடங்களிற்குப் பின்னர் 34 மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

 

 


 கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கடந்த 54 வருடங்களிற்குப் பின்னர் 34 மாணவர்கள் 

9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். 

2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அண்மையில் வெளியாகியது. இதில் கல்முனை கல்வி வலய கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி  54 வருட கால கல்வி பயணத்தில் முதற்தடவையாக அதிகமான “9A” விசேட சித்திகளைப் பெற்றுள்ளது.  

இந்தப் பெறுபேறுகள் மூலம் முஸ்லிம் பெண்களின் கல்வி வளர்ச்சியில் தனக்கு என்று ஒரு தனி அடையாளத்தை மஹ்மூத் மகளிர் கல்லூரி பெற்றுள்ளது.

இதன் அடிப்படையில் 34 மாணவிகள் 9A சித்தியையும், 15 மாணவிகள் 8A,B சித்திகளையும், 02 மாணவிகள் 8A,C சித்திகளையும், 08 மாணவிகள் 7A,2B சித்திகளையும், 04 மாணவிகள் 7A,1B,1C சித்திகளையும், ஒரு மாணவி 7A,2C சித்திகளையும் பெற்று விசேட சித்திகளைப் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

கல்லூரியில் 54 வருடங்களுக்குப் பின்னர் சிறந்த பெபேறுகள் பெற்றதையிட்டு குறித்த மாணவர்களை கல்லூரிச் சமூகம் வாழ்த்திப் பாராட்டியுள்ளது. இந்த சாதனை வளர்ந்து வரும் முஸ்லீம் பெண்களின் கல்வித்துறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் என்று கல்லூரிச் சமூகம் தெரிவித்துள்ளது.