மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றதை 40 லீட்டர் பாலில் குளித்து "நான் சுதந்திரமடைந்தேன்" என கத்தியபடி கொண்டாடிய மாணிக் அலி -
மாணிக் அலி என்பவர் தனது மனைவியை
பிரிந்து விவாகரத்து பெற்றதை 40 லீட்டர் பாலில் குளித்து கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.நார்த்ஈஸ்ட் லைவ் ஊடக அறிக்கையின்படி, மாணிக் அலி தனது மனைவியுடன் தனது மகளுக்காக மீண்டும் இணைய முயற்சித்திருந்தார்.
ஆனால், அவரது மனைவி தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு, குடும்பத்தை பலமுறை கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த அலி, விவாகரத்து செய்ய முடிவெடுத்து, பிரிவைப் பெற்றார்.
இன்ஸ்டாகிராம் பக்கமான @zindagi.gulzar.h இல் பகிரப்பட்ட வீடியோவில், வெள்ளை உள்ளாடை மற்றும் நீல ஜீன்ஸ் அணிந்த அலி, 40 லீட்டர் பாலை தனது உடலில் ஊற்றி, “நான் சுதந்திரமடைந்தேன்” என்று கேமராவைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
இந்த சம்பவம் அஸ்ஸாமின் நல்பாரி மாவட்டத்தில் உள்ள பரலியாபார் கிராமத்தில், முகல்முவா காவல் நிலையத்தின் கீழ் நடந்ததாகத் தெரிகிறது.
இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒரு பயனர், “நல்ல முடிவு” என்று ஆதரவு தெரிவித்தார். மற்றொரு பயனர், பால் வீணாக்கப்பட்டதற்காக ஆலியைக் கண்டித்து, “இது மக்களின் சுயநல மனப்பான்மையை காட்டுகிறது. இதைச் செய்வதால் உங்களுக்கு மன அமைதி கிடைத்தால், செய்யுங்கள். ஆனால், இதன் மூலம் நீங்கள் எவ்வளவு முதிர்ச்சியற்றவர் என்பதை காட்டுகிறீர்கள்” என்று கருத்து தெரிவித்தார்.