செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 


யாழ். செம்மணியின் நேற்றைய அகழ்வின் போது 4 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 7 ஆம்  நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறுவரினது என  சந்தேகிக்கப்படும் எலும்பு தொகுதி உட்பட 4 புதிய எலும்புதொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.