கிளின் சிறிலங்கா வேலைத்திட்டம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 30வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் எம்.புவிராஜ் தலைமையில் இன்று (31) இடம் பெற்றது.
மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளரின் எஸ்.சுதாகரன் நெறிப்படுத்தலின் கீழ் கொக்கட்டிச்சோலை சமுர்த்தி வங்கியினால் மாபெரும் சிரமதான நிகழ்வு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையில் காலையில் இடம் பெற்றது.
இதில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்டுப்பாட்டுச்சபை உறுப்பினர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.