2025 ஆம் ஆண்டுக்கான கிரேண்ட் செஸ் தொடரின், சர்வதேச செஸ் போட்டியில் இந்தியாவின் குகேஷ் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
குரோஷியாவின் தலைநகரில் இடம்பெற்ற
இந்தப் போட்டியில், நோர்வேயின் முதல்தர வீரர் மாக்னஸ் கார்ல்சென் (Magnus
Carlsen) மற்றும் உலக செம்பியன் குகேஷ் உள்ளிட்ட 10 பேர் கலந்து கொண்டனர்.
இறுதியில், நோர்வேயின் மாக்னஸ் கார்ல்சென் 22.5 புள்ளிகளுடன் செம்பியனானார்.
அமெரிக்காவின் வெஸ்லே 20 புள்ளிகளுடன், 2 ஆவது இடத்தையும், இந்தியாவின் குகேஷ் 19.5 புள்ளிகளுடன் 3 ஆவது இடத்தையும் பெற்றனர்.