இலங்கையின் 2025 கல்வியாண்டிற்குத் தேவையான அனைத்து பாடசாலை சீருடை துணிகளையும் சீனா அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதன் பெறுமதி ரூ. 5,171 மில்லியன் ஆகும்.
இந்த நன்கொடை நிறைவடைந்ததைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ சான்றிதழ் பரிமாற்ற நிகழ்வு நேற்று கொழும்பு, பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சில் நடைபெற்றது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சீன அரசாங்கத்தின் மானியமான இந்த துணி, 2025 ஆம் ஆண்டிற்கான அனைத்து அரச மற்றும் அரசு உதவு பெறும் பாடசாலைகளுக்கான முழு பள்ளி சீருடைத் தேவையையும் உள்ளடக்கியது.
இந்த நிகழ்வின் போது, பிரதமர் அமரசூரிய, இந்த நன்கொடை சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்பு ஒத்துழைப்பின் பிரதிபலிப்பாகும் என்று கூறினார்.