நாடளாவிய ரீதியில் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு - 2025..

 


 

2020, 2021 மற்றும் 2022 கா.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் மற்றும் விவசாய பிரிவில் தோற்றியோர் விண்ணப்பிக்க முடியும்.

கல்வித் தகைமை: க.பொ.த (சா/த) பரீட்சையில் தமிழ், கணிதம், விஞ்ஞானம், மற்றும் ஆங்கிலத்தில் திறமைச் சித்தியுடன் இரு தடவைக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியடைந்திருப்பதுடன் க.பொ.த (உ/த) பரீட்சையில் உயிரியல், கணிதம் அல்லது விவசாய பிரிவில் ஒரே தடவையில் 3 பாடங்களும் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

18 வயதிற்கு குறையாமலும் 28 வயதிற்கு கூடாமலும் இருப்பதுடன் திருமணம் ஆகாதவராக இருக்கவேண்டும்.

விண்ணப்பங்கள் சுகாதார அமைச்சின் இணையத்தளமான “www. health.gov.lk” எனும் இணையவழியூடாக 12.08.2025 இற்கு முன்னர் விண்ணப்பிக்கவும்.

மேலதிக தகவல்களுக்கு 17.07.2025 வர்த்தமானி பத்திரிகை மற்றும் 0713526234 இற்கு தொடர்பு கொள்ளலாம்.

தயவு செய்து இச்செய்தியை உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்து வட கிழக்கில்  அதிக விண்ணப்பதாரிகளை இணைத்து தமிழ் பேசும் தாதியர்களை உருவாக்க உதவும்.